உண்மை
உண்மை
உயர்வும் தாழ்வும் உருவினில் இல்லை !
உலகம் அளித்த பதவியில் இல்லை !
உலகில் நிலையாப் பொருளிலும் இல்லை !
உறவுகள் கொண்ட பெருமையில் இல்லை !
உனக்குள் இருக்கும் உண்மையி லிருக்கும் !
புமுதியில் விழுந்த பொன்னின் தரத்தை
புழுவின் கூட்டம் புரிந்து கொள்ளுமா?
உண்மை என்றும் வீழ்வது இல்லை
உலகம் என்றும் உறங்கு வதில்லை !
ஓர்நாள் உண்மை உலகை எழுப்பும் !
உண்மை அன்று உலகில் நிலைக்கும் !