நடிக்க தெரிந்தவள்
நாளும் நீள
தொலைதூரம் கடக்க
உன்னை தொலைத்து வந்தோன்
துயரம் நிங்க..
மொழி தெரியா நாட்டிலே
வழி தெரியா நாட்கள் ஒட
நான் உணர்ந்த வலிகளை
நீ உணர்ந்திடாத வகையிலே
மெளனமாக நடிக்க..
நீ கடந்த நிஐங்களை
நினைத்த பார்கிறோன்
தூசு போல தெரிகிறது
என் வலிகள்
உன் முன்னால்
நம்பிக்கையை நாளும்
வளர்த்தவலே
கண்ணீருடன் காதல் வருகிறது
உன் மேல் என் அன்பு தாயே.