புன்முறுவல்

அழகே பொறாமை கொள்ளும் அழகு!
அடக்கமே தோற்றுப்போனது அவளிடத்தில்..
அவளைப் பார்த்த மறுநொடியில்,
விழி மறந்தேன்;
வழி மறந்தேன்;
சொல் மறந்தேன்;
செயல் மறந்தேன்;
என்னையே மறந்தேன்;
உன்னையே நினைத்தேன்;
நீ நினைக்கவும் தேவையில்லை ,
அணைக்கவும் தேவையில்லை என்றேன்;
அவள் இதழோரம் புன்னகைத்துச் சென்றாள்!
என் இதயத்தை திருடிச் சென்றாள்;
அவள் புன்முறுவல் போதும்,
இந்த யுகம்முழுக்க எனக்கு இன்முறுவல்தான்....

எழுதியவர் : கௌசல்யா ஜெயக்குமார் (3-Oct-18, 8:51 pm)
Tanglish : punmuruval
பார்வை : 124

மேலே