முழுமதி

முழுமதி (வெண்பா)

கடல்குளித் துப்பொங்கி வரும்கார் முகிலில்
தலைமுடித் தோடிவரும் பெண்ணே! தினந்தினம்
உடலிளைத் தொளிகுறையு முழுமதியாள்; உந்தன்
கதையறியக் காத்திருப் பேன்.

கடல் குளித்து
பொங்கிவரும்
கார்முகிலில்
தலைமுடித்து
ஓடிவரும் பெண்ணே!
தினந்தினம்
உடலிளைத்து
ஒளிகுறையு(ம்)
முழுமதியாள்; உந்தன்
கதையறியக் காத்திருப்பேன் !

எழுதியவர் : கவி இராசன் (3-Oct-18, 10:03 pm)
சேர்த்தது : கவி இராசன்
பார்வை : 3367

மேலே