அவனில்லாது ஓர் அணுவும் இல்லை
ஓடும் நதி, ஓடை, நீர் வீழ்ச்சி
ஓயா அலைஓசைக் கடல்
வெடித்து அனல்பொங்கும்
எரிமலைகள்,பிளந்து
கூடி-பிளக்கும் கண்டங்கள்
வளரும் மாமலைகள்
என்று இப்படி நாம்
ஓர் இயற்கை பட்டியலே
தந்திடலாம் எதற்கென்று கேளுங்கள்
ஆம், இவ்வுலகில் உயிரற்ற பொருள்
என்று எதைக்கூற-அன்று க்ரித யுகத்தில்
'மகனே, பிரகலாதா, நீ கூறும்
உந்தன் ஹரி, இந்த தூணில்
இருக்கின்றானா என்று கேட்டு
தூணை வாளால் தாக்க,
வெடித்தது தூண் .............
நரசிம்மனை பெற்றேடுத்து...'
தூணே தாயாகிறது! என்ன
வினோதம்! இது கூறுவது
இவ்வுலகில் ஒவ்வோர் அணுவிலும்
அவனியக்கமே .......அவனில்லா பொருளில்லை
அவனில்லை என்று கூற