தலை விதி கை எழுத்து

கை எழுத்தை பார்த்து
உன் தலை எழுத்தை போல்
எழுதுகிறாய் நீ என
இரெண்டாம் வகுப்பு ஆசிரியர்
அடித்தது நாபகம் இருக்கிறது

முன்றாம் வகுப்பு
போனதில் இருந்து
வரையவும் வராது
தெரிந்து விட்டது

வாழ்க்கை கல்வி பரிச்சை
வரைய தான் வேண்டும்
என்றபோது
வரைந்தது இரண்டு தான்

தெரிந்ததும் இரண்டு தான்
ஒன்று வளையல் வைத்து
வரையும் ஒலிம்பிக் வளையமும்
பக்கத்தில் இருந்த பண்ணையாரின்
மகளிடம் கெஞ்சி வாங்கி தான் வரைந்தது

555
555
555 போட்டு வரையும் நாய் குட்டி


கோபத்தில் உனக்கு ஏதும்
வரைய தெரியாத என வாத்தியார்
கட்டிவிட்டார்
அவமானம் ஒரு பக்கம்

வானம் வரையலாம்
குளம் வரையலாம்
மீன் வரையலாம்
இல்லை மரம் வரையலாம்
கத்திக்கொண்டு இருந்தார்

என்னக்கு வரைய தெரிந்தால்
வரைந்து இருப்பேன்
தெரியாமல் தானே வரையாமல்
இருக்கிறேன்

மனதிற்குள் சொல்லி கொண்டு
எடுத்து வந்தேன் பேப்பரை

மழை வரைந்தால்
பக்கத்தில் இருந்தவன்
சொல்கிறான்
எந்த ஊரில் மழை
இப்படி பெய்யும்

பயந்து அளித்து
மரம் வரைந்தால்
அது என்னவோ
எனக்கு குட மரமாக தெரியவில்லை

அடுத்து மனதில் நின்றது
பூ
என்னவோ அந்த பூவும்
ஒரு இதழ் பெரிதாய்
இன்னொரு இதழ் சின்னதாய்

பிடிக்காமல் போய்விட்டது
ஓவியமும் எழுத்தும்

நல்லாய் படிப்பதால்
எனக்கு எடுத்த ஆசிரியர் அனைவரும்
கை எழுத்தை திருத்து என அட்வைஸ்

பத்தாம் வகுப்பு
பயம் கட்டி விட்டார்கள்
அழகாய் இருந்தால் தான்
மார்க் வரும்

400 மதிப்பெண்ணை தாண்டி விட்டது
ஒரு ஆசிரியர் வந்து சொன்னார்
கை எழுத்து அழகாய்
இருந்தால்
இன்னும் அதிக மதிப்பெண் எடுத்திருக்கலாம்

இன்னொருவன்வந்து சொன்னான்
நான் 450 என்று
என்னை போல் படிப்பவன் அவன்

பஸ்ட் குரூப் எடுத்தால்
வரைய வேண்டும்
பயந்து ஹிஸ்டரி குரூப்

முடித்து ஆசிரியர் படிப்பு
அங்கு வொர்க் ஒன்று
எழுதுவதாய் இருக்கும்
இல்லை வரைவதாய் இருக்கும்

ஒரு தோழி சொல்லி கொடுத்தாள்
மரம் வரைவதை

கழிந்து விட்டது
படிப்புகள்

ஆனால் அவர்களுக்கு
தெரியுமா
நான் இப்பொழுது
வரைவேன்
எழுதுவேன் அழகாய்
என்று
பேனா கொண்டு எழுதினார்கள்
நான் கி போர்டு கொண்டு
எழுதுகிறேன்

வரைய மின்சார எலி

நன்றி சொல்ல தான் வேண்டும்
எத்தனை பேர்
என் எழுத்தை
திருத்த முயற்சித்தார்கள்

திருந்தி விட்டது

இனி சொல்வார்களா
என் தலை விதி
அழகாய் இருக்கும்

எழுதியவர் : தமிழ் கோமதி (21-Aug-11, 7:29 pm)
சேர்த்தது : sarah geneema
பார்வை : 940

மேலே