சிலைசெய்வேன் நான்மலை சாய்த்தே

விழியிரண்டும் ஏந்திய நல்லொளித் தீபம்
பொழிந்திடும் காலைப் பனிமலர் பூக்கள்
அலைபாய்ந் திடும்பூங் கயல்கவின் ஓடை
சிலைசெய்வேன் நான்மலைசாய்த் தே .

----இன்னிசை வெண்பா

விழியிரண்டும் ஏந்திய நல்லொளித் தீபம்
பொழிந்திடும் காலை மலர்கள் --விழியோ
அலைபாய்ந் திடும்பூங் கயல்கவின் ஓடை
சிலைசெய்வேன் நான்மலைசாய்த் தே .

-----நேரிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (4-Oct-18, 10:10 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 104

மேலே