காக்கி கனவே!

இருள் சூழூம் மேகம்;
ஒளி காட்டி போகும்,
காக்கி கனவே!
என்னில் கலையாதே.

வறண்ட தாய் மனமும்;
வற்றாத களிப்பில் மாறும்,
காக்கி கனவே!
என்னில் கலையாதே.

மாலை சூடும் தங்கை;
வாழ்வும் சுகமே அமையும்,
காக்கி கனவே!
என்னில் கலையாதே.

எழுதியவர் : ஆ.பிரவின் ஒளிவியர் ராஜ் (5-Oct-18, 9:07 pm)
சேர்த்தது : பிரவின் ராஜ் ஆ
பார்வை : 85

மேலே