நீர்வழியும் நிலம்

நீர்வழியும் நிலப்பரப்பில்
நீந்திஊறும் நத்தை அவள்
கருநீல கார்முகிலில் களி
கொண்ட யானை நான்
சேர்ந்திசைக்க ராகம் தேடி
நிலவொளியில் தவம் செய்தேன்
பரம்பொருளின் வரம் கிடைக்க
சதுரங்க களம் புகுந்தேன்
அருள் புரிவாய் பெருந்தேவி
அன்பின் வழியது அண்டம்
அன்றே சொன்னான் தமிழ்க்கிழத்தி