முயன்றால் முடியும்

முயன்றால் முடியும் இடியையும் தாங்கலாம்.
முயன்றால் முடியும் இருள் நீக்கி விடிவையும் காணலாம்.
முயன்றால் முடியும் விதியையும் வெல்லல்லாம்.
முயன்றால் முடியும் முடிவில் புகழை அள்ளலாம்.

முயன்றால் முடியும் விண்ணையும் தொடலாம்.
முயன்றால் முடியும் மண்ணில் பொன்னையும் பார்கலாம்.
முயன்றால் முடியும் முடவனும் விமானி ஆகலாம்.
முயன்றால் முடியும் கறை படியும் கரங்களும்
சரித்திரம் படைக்கலாம்.

முயற்சி இல்லாதவன் வீழ்ச்சி அடைவான்.
முயற்சித்தவன் மகிழ்ச்சி கொள்வான்.
முயற்சியை மூச்சு போல் நினைப்பவன் செல்வந்தர் ஆவான்.
முயற்சியை அலட்சியம் செய்பவன் ஓட்டான்டியாவான் ..

முயலும் வெல்லும் ஆமையும் வெல்லும் (ஆனால்)
முயலாமை வெல்லாது என்னாளுமே.
முயன்றால் முடியும் என்பவனுக்கு தடைக் கல் படிக்கல் போலே.
முடிவில் வெற்றி தழுவும் முயன்றால் முடியும் எனபவனை.
முடிவில் நெருங்கும் நிலையான மதிப்பும் நிம்மதியான வாழ்வும் lll

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (6-Oct-18, 7:39 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : muyandral mudiyum
பார்வை : 264

மேலே