ஞானம்
சதுரகிரி...
சித்தர்கள் உலவும் அற்புத மலை .
நீண்ட நாட்களாக வரவேண்டும் என நினைத்து இப்போதுதான் வரமுடிந்தது ..!
மலையின் மையப்பகுதி வரை ஏறிட்டேன் .முதுகில் இருந்த பையில் இரண்டு தண்ணீர் பாட்டில் சில ரொட்டிகளும் இரண்டு காவி வேஷ்டியும் மட்டுமே இருந்தது .அதுவே பெரும் சுமையாய் அழுத்த மூச்சு வாங்கியது.
இரட்டை லிங்கத்தை வணங்கிவிட்டு சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு மீண்டும் மலையேறலாம் என்று நினைத்தபடியே அருகிலிருந்த பாறை ஒன்றில் அமர்ந்துகொண்டேன் .
மெல்ல திரும்பி அடிவாரத்தைப் பார்க்க தூரத்தில் ஒரு பத்து வயது சிறுமி தனது மூன்று வயது தம்பியை தூக்கிக்கொண்டு அனாயசமாக மலைஏறிக்கொண்டிருந்தாள்.
நான் ஆச்சர்யமாய் அவளையே பார்த்துக்கொண்டிருக்க, என்னை அவள் கடந்த நிமிஷம்......
அவளிடம் கேட்டேன் .
பாப்பா ...என்னால இந்த சிறிய பையை சுமந்துகொண்டு மலையேற முடியலையே ,உனக்கு சிரமமாக இல்லையா ?எப்படி உன்னால் முடிகிறது !நான் கேட்ட வினாடி.....
அந்த சிறுமியின் முகத்தில் புன்னகையோடு ....
அய்யா ...நீங்க ஒரு சுமையை தூக்கிக்கொண்டிருக்கிங்க ,.:".ஆனா ,நான் என் தம்பியை தூக்கிக்கொண்டிருக்கிறேன் "சொல்லிவிட்டு அவள் மலையேறத்துவங்க ......
அன்பு எதையும் சாதிக்கும் என்பதை என்னால் உணர முடிந்தது .