சூழல்
களனி கங்கையோ கறை படிந்து போயுள்ளது
கானும் நிலங்கள் எல்லாம் வலுவிழந்து போயுள்ளது
அந்தமற்ற வானமோ வறண்டு போயுள்ளது
மரத்தை வெட்டி தளபாடம் செய்தோம்
வெட்டு்ண்ட மரமோ கூறியது
பாதிப்பு என்னை விட
உனக்கு தான் அதிகம் என
விவசாயத்தை அழித்து வானுயர
கட்டிடம் படைத்தோம் -இன்றோ
ஒரு சோற்று பருக்கைக்காய் ஊரோல்லாம்
அலைகின்றோம்
நீர்நிலை ஏரி அழித்து ஆடம்பர மாளிகை கட்டி
ஆசை ஆசையாய் வாழ்ந்து என்ன பயன்
வருங்கால சந்ததி தரணியில் தண்ணீருக்கு
ஏங்கித்தான் நிற்க வேண்டுமோ
நிலத்தை கூறு போட்டு நிறுவனம் பல செய்தோம்- பருப்பு
தொழிற்சாலை இன்று செருப்பு
தொழிற்சாலையாய்
ஆற்று மண்ணை அகழ்ந்தெடுத்து அழகழகாய்
பணம் சேர்த்து வெள்ளத்தால்
அடியுன்டு வீண் மரணம்
நிகழ்கிறதே
காடுகளை அழித்தோம் கேடு வந்தது- மரத்தை
வெட்டினாேம் மழையும் நின்றது
கிணற்றக்குள் வாளியை விட்டால்- வெறும்
களிமண் தான் மிஞ்சுகிறது
அணுகுண்டை வெடிக்கின்றோம்
பூமியை பிளக்கின்றோம்
இயற்கையின் சீற்றமென - இதையும்
தான் சொல்கின்றோம்
விஞ்ஞான வெளிச்சத்தில் வாழும் நாம்
சூழல் விசயத்தில் இருளில்
மாட்டியுள்ளோம்
அதிகன் வசந்தகுமார்