காதல் நிலா நீ பெண்ணே
வசந்தத்தின் இரவு
வீசும் குளிர்க்காற்று
நீல வானம் , வானில்
நிலவு காய்ந்தது, என் மனம்
குளிர்ந்தது ............
பெண்ணே, உன்னை நேற்று
பார்த்தது முதல் , என் எண்ணம்
எல்லாம் உன் நினைdவாய்
உன்னையே நினைந்துருகிட,
நிலாவைப்பார்த்து உன்னையே
தரையில் வந்திறங்கிய நிலவாய்
எண்ணி மகிழ்ந்தேன் ......
தடாகக் கரையில் நான்
நீர்த்திவலைகள் ஏதுமில்லை
எங்கும் நிசப்தம்
அதன் பளிங்கு நீரில்
வசந்தத்தின் அதே முழுநிலவைப் பார்த்தேன்
என்னையும் அறியா என் கால்கள்
நிலவை மீண்டும் நீ என்றெண்ணி அதை
உன் முகமாய் எண்ணி பிடிக்க
என் கைகள் பளிங்கு நீரைத்தீண்ட
கலைந்தது நீர் நிலவும்
அது நீ இல்லை என்று தெளிந்தது
இப்போது என் மனமும்
என் நிலவுப் பெண்ணே
உன் முகத்தைக் காண
அலைகின்றதே என் மனம்
உன்னைக் காண்பதெப்போது ?