நாவுக்கரசும் உணரல
மதுபானம் அருந்தக் கூடாது, அருந்தினாலும்
அளவுக்கதிகமாக அருந்தக் கூடாது,
பகலில் அருந்தக் கூடாது, அருந்தினாலும்
விசை வாகனம் ஓட்டக் கூடாது;
ஓட்டினால்,
ஆபத்தில் சிக்குவது உறுதி,
கைகால் இழப்பதும் உறுதி,
தலைக்காயம் ஆனால்,
தன்னிலை மறப்பது உறுதி;
தன்னையே இழப்பதும் உறுதி;
இதை அவனவனும் உணரல,
அரசும்... உணரல,
நாவுக்கரசும்... உணரல.

