கொள்ளை மகிழ்ச்சியடா நெஞ்சில்

துள்ளியோடும் நதிகள் துடித்து விளயாடும் மீன்கள்
பள்ளம் பார்த்து வீழ்ந்தொழுகும் பஞ்சவர்ண நீர் வீழ்ச்சி
கள்ளமில்லா பட்சிகள் அங்கு களித்து மகிழும் மான்கள்
தெள்ளிய வான்வெளி முகில்கள் திகட்டாத வெண்ணிலா
உள்ளம் மகிழ குயில்ப் பாட்டு கண்களை அள்ளும் மயிலாட்டம்
அள்ளி யள்ளி நெஞ்சில் பூ மணம் வீசும் ஆனந்தத் தென்றல்
கொள்ளை மகிழ்ச்சியடா இயற்கையோடு கொஞ்சிக் கிடக்கையிலே!

அஷ்றப் அலி

எழுதியவர் : alaali (10-Oct-18, 12:28 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 127

மேலே