உன் விழிச்சாரலில் - - --- - - மாற்று வடிவம்

உன் விழிச்சாரலில் - - - - - - மாற்று வடிவம்
***********************************************************************
( கவின் சாரலன் படைப்பிற்கு ஓர் மாற்று வடிவம் )

மாலைவெயில் மஞ்சளில் குளித்தெழுந்த உன்மேனியும்
மாலைமலர் உன்மேனியில் உதிர்ந்தணைந்த பேரெழிலும்
மறக்காது உனைநனைத்த மேல்மலைச் சாரலும்
மகிழ்வோடு உனைநனைத்து அணைத்திடும் அந்திநிலவும்
தண்தென்றல் குளிரினால் சிலிர்த்திடும் அவ்வழகும் -- உன்
பூவிதழ் புன்னகைக்க சிந்திடும் தேனெழிலும்
"பா"விதைக்கத் தூண்டுதடி ! உன் ஓரவிழிக் கணையிடையே -- இக்
கவிச்சாரல் புனைந்திட்டான் அழகாய் ஓர் கவிதை !

எழுதியவர் : சக்கரைவாசன் (11-Oct-18, 10:16 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 714

மேலே