விவசாயி

காலையென்றும் மாலையென்றும் பாராது
காளையிரண்டு மாட்டி ஏர் பூட்டி
காடு மேடு திருத்தி கழனியாக்கி
காலமெல்லாம் உழைத்திடும்
கரிசல் காட்டு மனிதர் இவர்

பாடுபட்டு பயிர் செய்த பூமியது
பாளம் பாளமாய் வெடித்து
தண்ணீரின்றி தரிசாய்
கிடக்கும் நிலை கண்டு
மனமது தவியாய் தவிக்கும்

சாகுபடி செய்த பயிரது
பால்பிடித்து சூல் கொண்ட மகளிரின்
மனமென காற்றில்
அலை அலையாய் அசைந்தாடையில்
அக்கம் பக்கம் மறந்து அகம் மகிழும்

ஒட்டிய வயிறுக்கு ஒருவாய் உணவின்றி
ஒரு குவளை நீர் அருந்தி பசியடக்கி
வகை வகையாய் பயிரிட்டு பிறர்க்கு
வாழ்வழித்தாலும் இவர்
வாய்க்கு ருசியாய்
உண்டதில்லை ஒருநாளும்

கதிரறுத்த பயிரது மலைமலையாய்
களத்துமேட்டில்ம் குவிந்தாலும்
கால் வயிற்றுக் கஞ்சிக்கு வழியின்றி
நாதியற்றுக் கிடப்பர் நாட்கணக்கில்
ஆயினும் இவர் நம்பிக்கை
ஒருபோதும் குறைவதில்லை
இது பொன் விளையும்
அன்னை பூமியென்று

எழுதியவர் : கருப்பசாமி (11-Oct-18, 10:32 pm)
Tanglish : vivasaayi
பார்வை : 152

மேலே