என்னடி மாயாவி நீ

தந்திரங்கள் பல செய்து
எந்தன் மனதை கவர்கிறாயே
என்னடி மாயாவி நீ!
மேகம் நோக்கி பறக்கும் பட்டமாய்
எப்போதும் என் மூச்சுக்காற்றை
உன்னை நோக்கியே இழுக்கிறாயே
என்னடி மாயாவி நீ!
புது கதைகள் கேட்கும் குழந்தையையாய்
பல ஆச்சரியங்களுடன்
உன்னையே பார்க்க வைக்கின்றாயே
என்னடி மாயாவி நீ!
அழகாய் பல கதைகள் பேசி
சிரிப்பால் உன் மெளனம் வீசி
எப்போதும் என்னை பதைபதைக்க வைக்கிறாயே என்னடி மாயாவி நீ!
ஒற்றை அச்சில் சுழலும் பூமியை போல
உன்னேயே சுற்ற வைக்கிறாயே!!!
ஹய்யோ ....
என்னடி மாயாவி நீ!!!!

எழுதியவர் : மணிகண்டன் (12-Oct-18, 11:37 am)
சேர்த்தது : மணிகண்டன்
Tanglish : ennadi maayaavi nee
பார்வை : 341

மேலே