சுதந்திர மனிதன்

" உய்ய் உய்ய் உய்ய் "

சைரன் ஒலி இதயத்தைக் கிழிக்க கிராமம் வழியாக காவல்துறை வாகனம் பறந்தது மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம் நோக்கி. பின்னாடியே அவசர ஊர்தியும் ஒலி எழுப்பிக்கொண்டே சென்றது.

" என்னாச்சு! என்னைக்கும் வராத இந்த போலீஸ் வண்டி நம்மை ஊரைக் கடந்து செல்வது ஏன்? ", என்று டீக்கடையில் இருந்த பெரியவர் டீக்கடைக்காரரிடம் கேட்டார்.

" அது ஒன்னுமில்ல பெரியவரே! வனத்துறை அதிகாரி உதயமூர்த்தியை யாரோ கொடூரமா கொன்னு அருவி பக்கம் போட்டுருக்காங்க. ",என்றார் டீக்கடைக்காரர்.

கேட்ட பெரியவர், " செத்தானா பாவி? ", என்று நினைத்தார்.

நான்கு வாரங்களுக்கு முன்பு அந்த பெரியவரின் பேத்தி செல்வி விறகு பொறுக்க மலைக்கு சென்றிருந்தார்.
அப்போது அவளை வழி மறித்து தகராறு செய்த அந்த உதயமூர்த்தி மிரட்டி அனுப்பி இருந்தார்.
அது பற்றி தன் குடும்பத்திடம் கூறிய செல்வி, அன்றிலிருந்து நான்காம் நாளில் காணாமல் போனார்.
எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
மறுநாள் பிறகு விறகு பொறுக்கச் சென்றவர்கள் வந்து செல்வி பிணமாக கிடப்பதாகக் கூறினார்கள்.
இது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்த போது அதை விசாரிப்பதாகக் கூறி தட்டிக் கழிக்கப்பட்டது.
இந்த மாதிரி பல பெண்கள் காணாமல் போவதும் பிணமாகக் கிடப்பதுமாக தொடர்கதையாக இருந்து வந்தது. அப்போது போலீஸ் தூங்கியது.

இன்று வனத்துறை அதிகாரி கொல்லப்பட்து காவல்துறை சைரன் அலறுது.

காவல்துறை அதிகாரிகள் பிணத்தை சுற்றி சுற்றி பார்த்து பேசிக் கொண்டார்கள்.
போஸ்ட் மார்டன் பண்ண பிணம் அனுப்பி வைக்கப்பட்டது.

போஸ்ட் மார்டன் பண்ணதில் மிகவும் பலமான இதயத்திலும் தலையிலும் தாக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதயத்தின் செயல்பாடும், மூளையின் செயல்பாடும் ஒரே நேரத்தில் நின்றதால் இறந்துள்ளார் என்றும்,
மேலே உள்ள காயங்கள் பாறை கற்களில் மோதி உருட்டப்பட்டதால் ஏற்பட்டவை என்றும் டாக்டர்கள் கூறினார்.

போஸ்ட் மார்டன் ரிப்போர்ட்டை வாங்கிய இன்ஸ்பெக்டர் மாதவ் தீவிரமாக ஆலோசனை செய்யலானார். அவர்தான்
வனத்துறை அதிகாரி உதயமூர்த்தி கொலை வழக்கில் சமந்தப்பட்ட கொலையாளியைக் கண்டுபிடிக்க மேலிடம் அனுப்பிய அதிகாரி.

மாதவ் கிராம மக்களிடம் விசாரணை செய்தார்.
யாரிடம் கொலையாளி பற்றிய துப்புக் கிடைக்கவில்லை.

மாதவ் மலை காட்டிற்குள் சென்று ஆய்வு செய்ய முடிவு செய்தார்.
மாதவ் உடன் நான்கு கான்ஸ்டபில்களும் ஒரு கிராமத்துக்காரரும் சென்றனர்.

வெகுதூரம் காட்டிற்கு மலையேறி வந்ததில் மாதவ் களைப்பாகிவிட்டார்.
அங்கிருந்த ஒரு மரத்தடியில் அனைவரும் அமர்ந்தனர்.
மாதவ்வை தவிர மற்றவர்கள் சற்று கண்ணயர்ந்து படுத்துத் தூங்க, திடீரென சிங்கம் உறுமும் சத்தம் கேட்டது.
எல்லாரையும் எழுப்பி உசாரானார் மாதவ். தன்
கைத்துப்பாக்கியை கையில் எடுத்துக் கொண்டார்.

சுற்றிலும் நோக்கி, மெதுவாக சத்தம் கேட்ட திசை நோக்கி நகர்ந்தார்.
சிறிது தூரத்தில் பெரிய ஆலமரம் ஒன்று இருந்தது.

அதனடியில் சிங்கம் படுத்திருந்தது.
அதன் அருகில் ஒரு சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான்.

இந்த அடர்ந்த காட்டுக்கு யார் இந்த சிறுவன்? எப்படி இங்கு வந்தான்? என்று மாதவ் சிந்தித்தார்.
சிறுவனிடம் பேச்சுக் கொடுக்க எண்ணிய போது, சிங்கம் அருகில் இருப்பதைக் கண்டு பயமாக இருந்தது.

மாதவிற்கு பின்னால் ஏதோ சத்தம் கேட்க திரும்பி பார்த்தார்.
ஒரு புலி யானை ஒன்று அவரை நோக்கி வேகமாக மோத வந்தது.
மாதவ் யானையைக் கண்டு அசைவற்று நிற்கையிலேயே மாதவ் பின்னால் இருந்து சிங்கம் பாய்ந்து யானையை நோக்கி உறுமியது.

யானை சடன் பிரேக் அடித்த லாரியை போல் நின்று பின்னோக்கி திரும்பிச் சென்றது.

இப்போது அந்த சிறுவன் மாதவ் கையை பிடித்தான்.
மாதவ் கூட வந்தவர்கள் யானைக் கண்டதுமே தெறித்து ஓடியிருந்தார்கள்.

மாதவ் சிறுவனின் முகத்தைப் பார்த்தான்.
அவன் மாதவின் கையைப் பிடித்துக் கொண்டு தான் வந்த திசையில் நடந்தான்.

சிறிது நேரத்தில் ஒரு குகை வந்தது.
உள்ளே அழைத்து சென்றவன் பழங்களை மாதவ் புசிக்கக் கொடுத்தான்.

மாதவ் ஒரு வாழைப்பழத்தை தின்று கொண்டே, " தம்பி! உன் பெயரென்ன? ",என்றார்.

சிறுவன் ஏதும் பேசாமல் குகை உள்ளே சென்றான்.
சிறு நேரத்தில் உள்ளிருந்து ஒரு தாடி மனிதர் வெளியே வந்தார்.

வந்தவர், " நீர் என்ன நோக்கத்தோடு இங்கு சுற்றிக் கொண்டிருக்கிறீர்? ",என்றார்.
" என் பெயர் மாதவ்.
நான் இன்ஸ்பெக்டர். வனத்துறை அதிகாரி கொலை பற்றி விசாரிக்கவும்,
கொலையாளியைக் கண்டுபிடிக்கவும் வந்தேன். ",என்றார் மாதவ்.

அதைக் கேட்டு சிரித்த அந்த தாடிக்காரர், " நான் தான் அந்த கொலையாளி. ",என்றார்.

"எதற்காக கொன்றீர்கள்?",என்று மாதவ் விசாரணையை தொடங்கினார்.

" அவன் செய்த செயல் என்னால் அவனை கொலை செய்தது. ",என்றார் அந்த தாடிக்காரர்.

" அப்படி என்ன செய்தார்? அவர் என்ன குற்றம் செய்தாலும் அவரை தண்டிக்க நீதிமன்றம் உள்ளது.
காவல்துறை உள்ளது. ",என்றார் மாதவ்.

அதைக் கேட்டு பயங்கரமாகச் சிரித்த தாடிக்காரர், " எந்த நீதிமன்றம்? சாட்சியில்லாமல் எந்தத்தவறு செய்யலாம் என்கிற நீதிமன்றமா?
குற்றவாளிகள் தங்களை நீதிபதிகளாக காட்டிக் கொண்டு மக்களை ஏமாற்ற தீர்ப்பெழுதுகிறார்களே அந்த நீதி மன்றமா?
இந்த மலையடிவாரக் கிராம மக்கள் செல்வி என்ற பெண் இறந்த போது காவல்துறையினரிடம் புகார் அழித்தார்களே!
அப்போது உங்கள் காவல்துறை எங்கே போனது?
அதன் பிறகு நிறைய பெண்கள் கற்பழித்து கொலை செய்யப்பட்டார்கள்.
அப்போதெல்லாம் தூங்கிய காவல்துறை இப்போது இங்கே வந்து பேசுகிறது?! ",என்றார் அந்த தாடிக்காரர்.

" என்னதான் நியாயமாகப் பேசினாலும் நீங்கள் செய்தது குற்றம்.
உங்களை கைது செய்கிறேன். ",என்று துப்பாக்கியை நீட்டினார் மாதவ்.

" உங்கள் சட்டங்களுக்கும் நீதிக்கும் கட்டுப்பட்டவன் நான் அல்ல.
சுதந்திரமான மனிதன்.
எங்கே சுடு! பார்க்கலாம். ", என்றார்.

மாதவ் கைத்துப்பாக்கியை இயக்கினார்.
டூமில்! டூமில்!
எதிரில் யாரும் இல்லை.
மர்மமாகவே முடிந்தது.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (12-Oct-18, 5:52 pm)
பார்வை : 347

மேலே