உருவம் ஒரு தடையில்லை
ஊசி இல்லாமல்
உடுத்த உடை உருவாவதில்லை..
தீக்குச்சி இல்லாமல்
தீபமும் ஒளிர்வதில்லை..
நூல் இல்லாமல்
பூ மாலை தொடுப்பதில்லை..
மை இல்லாமல்
எழுதுகோல் எழுதுவதில்லை..
சாதாரணம் என்று இவ்வுலகில் எதுவுமில்லை..
சாதாரணமானவனும் நீயும் இல்லை..
உன் உருவம் ஒரு பொருட்டுமில்லை..
ஒன்றை உருவாக்க அது தடையும் இல்லை..
உயிரற்ற பொருள் பயனுள்ளதாய் இருக்க..
உயிருள்ள நாம் பயனற்று போகலாமோ..?