அன்பே உந்தன் அன்பில்

முற்றும் துறந்த முனிவரும்,
சுற்றும் மறந்து........
சற்றே மயங்கும்.........
மழலையின் கொஞ்சல் நீ!

பிள்ளை பசியாற............
வெள்ளை மனதோடும்
கொள்ளை பசியோடும் புன்னகைக்கும்.........
தாய்மையின் கர்வம் நீ!

ஆசை ஓசை மறைத்து........
மௌன பாசை பேசி..........
விலகி நிற்கும்........
பெண்மையின் பெருமை நீ!

அன்பே!
உந்தன் அன்பில்.......
மொழிகள் மறந்து போனேன்,
மரண நிலையும் கடந்து போனேன்!

எத்தனை வர்ணனை தந்தும்
பித்தனை போல் அலைகிறது
எந்தன் சிந்தை!
வரிகளற்ற வசனங்களில்..........
வார்த்தைகளற்ற கவிதைகளில்.........
உன் புகழ் பாட துடிக்கிறது
என் பேனா!

இருந்தும்..............
தன்னிலை மாறாமல்
என்நிலை கண்டு நகைக்கிறது
வெள்ளைக்காகிதம்!

எழுதியவர் : சோட்டு வேதா (13-Oct-18, 4:14 pm)
Tanglish : annpae unthan anbil
பார்வை : 698

மேலே