காதல்

பத்து மாதங்கள்
கருவிலுனைச் சுமந்தாள்
உன் தாய்
அது கல்லறையுடன்
முடியும் கதை...
பதினைந்து ஆண்டுகளாய்
நினைவிலுனைச் சுமந்ததனால்
இவளும் உன் தாய் தான்
இது கல்லறை தாண்டியும்
தொடரும் கதை....
“மணமுடி மற்றொருவனை”
என்றுயிருடன் தீக்குளிக்கச்
சொல்லாதே ஒருபோதுமினி!
உன்னுடன் சேர்ந்து வாழ
இன்னுமோர் ஜென்மம் வேண்டி
இறையிடம் இறைஞ்சி நிற்கும்
இவ்விலவு காத்த கிளி...
~தமிழ்க்கிழவி