கலங்காமல் காத்திரு
செந்தமிழ் எடுத்து
செவ் வண்ணத்தை விடுத்து.
கருநீல மை கொண்டு கடிதம்
வரைந்து விட்ட தேவதையே ........////////
தித்திக்கும் வரிகளிலே முக்கனி
போல் கவி வடிவில் கத்தரித்த வார்த்தைகளைக் கொண்டு
காதல் தூது விட்ட தேனமுதே ....///
சிலர் சித்தரித்த நாடகத்தால் சின்னாபின்னமாகப் போனதடி
நம் காதல் அதை நினைத்து வருந்தாமல் இல்லையடி நானும் நாயகியே ....////
அன்று சினம் கொண்டு நீ திட்டியவையும் கலங்கிய கண்களோடு ஓடியவையும்
என் விழியில் நின்று தினம் கொன்றதடி தூக்கத்தை ....///
அன்புக்கு அழிவு இல்லை உண்மைக் காதல் இறப்பதில்லை என்னைப் போல் நீயும் துடித்த படியே இருப்பதை அறிந்து விட்டேன்
உன் உருக்கமான மடல் கண்டதும் .....////
அடங்கி இருக்க மாட்டேன் இனிமேலும் நான் அருவாள் கொண்டு படை எடுத்தாலும் துணிந்து வருவேன் துணையாக உன்னைக் கரம் பிடிக்கவே கலங்காதிரு கண்மணியே ...../////