காதல் ரகசியம்

நிச்சயமாய் இது ரகசியம்தான்
அவள் மூச்சு சுடர்விடுகிறது
மூக்கின் நுனி வியர்வையின்
மர்மம் அனலாய் தகிக்கிறது
உதடுகள் மௌனங்களை
மெதுவாய் மொழி பெயர்க்கிறது
அவளின் அழுத்தமான
புன்னகையில் கன்னங்களும்
கன்றி சிவக்கின்றன
கண்களும் எதிர்பார்த்து
அபிநயம் (கவிநயம்) தொடுக்கின்றன
உயர் அழுத்த மின்சார
உணர்கருவிபோல்
உடல் நடுங்கியபடி
துடித்துக்கொண்டிருக்க
நிச்சயமாய் இது ரகசியம்தான்!

எழுதியவர் : மேகலை (19-Oct-18, 8:34 pm)
சேர்த்தது : மேகலை
Tanglish : kaadhal ragasiyam
பார்வை : 330

மேலே