குறைகளே நிறைகளாக
ஒரு ஊர்ல ஒரு விவசாயி வாழ்ந்து வந்தான்.அவன் மிகவும் சிரமப்பட்டு பணம் சேர்த்து பானைகள் இரண்டை வாங்கினான்.வாங்கும் போதே ஒரு பானை ஓட்டையாக இருந்தது.அவன் தினமும் தண்ணீர் எடுத்து வர நீண்ட தூரம் செல்வான் .பானைகள் இரண்டையும் ஒரு நீண்ட மூங்கில் கொம்பில் கயிறுகளை கொண்டு கட்டி வைத்திருந்தான்.தினமும் தோலில் சுமந்து நீரை எடுத்து வருவான்.ஓட்டை இருந்த பானையில் வீடு வந்து சேரும்போது அரை பானை தண்ணீர் தான் இருக்கும்.அதற்காக அவன் கவலைப்படவில்லை.அந்த ஓட்டையை அடைக்கலம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.ஓட்டையாய் இருந்த பானைக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.ஓட்டை பானையை மற்றொரு பானை கேலி செய்தது.உன்னால் தண்ணீர் வீணானதுதான் மிச்சம்.என்னால்தான் தண்ணீர் எசமானனுக்கு முழுதாய் கிடைக்கிறது.போ போ சீக்கிரம் உடைந்து விடுவாய் எனக் கூறியது.இதனைக்கேட்ட ஓட்டைப்பானை அழுதது.தன் எசமானனிடம் ஓட்டைப்பானை உங்களுக்கு என்னால் பயன் இல்லை.பிறகு என்னை தோளில் சுமந்து நீரை கொண்டு வரும் போது பாதிநீர்தான் இருக்கிறது என்னால் உங்களுக்கு கஷ்டம் என்னை விடுத்து வேறுபானை வாங்கிக் கொள்வது தானே எனக் கூறியது.இதைக் கேட்ட விவசாயி சிரித்து அட அசட்டுப்பானையே உன்னால் தான் நான் இப்போது நல்ல நிலைமையில் இருக்கிறேன்.நான் உன்னை வலது தோளில் சுமந்து வருவேன் நாம் வரும் பாதையில் பூச்செடிகளை நட்டு வைத்துள்ளேன்.ஓட்டை வழியாக வரும் தண்ணீர் அந்த செடிகளை சென்றடையும்.இப்போது அவை நன்றாக பூத்து குலுங்குகின்றன.அதில் கொஞ்சம் பூவை கடவுளுக்கும், எனது அம்மா, அப்பாவின் கல்லறைக்கும் வைத்து விடுவேன்.மீதிப் பூவை சந்தையில் விற்று எனது வாழ்விற்கு பயன் படுத்துகிறேன்.எனது மகிழ்ச்சியான வாழ்விற்கு நீயே காரணம் எனக் கூறினான்.உண்மையில் நீதான் என் எசமானன்.இதனைக் கேட்ட ஓட்டைப்பானை மிகவும் மகிழ்ச்சி அடைந்தது.மற்றொரு பானை அதனிடம் மன்னிப்பு கேட்டது.
நீதி: குறைகளையும் நிறைகளாக மாற்றி வாழ்வதுதான் வாழ்க்கை.