அவன்

அற்புத பேரழகி அவள்
அவள் பார்வைக்கும்
புன் சிரிப்பிற்கு அவன்
தன்னை இழந்தான்
அத்தனை அழகிருந்தும்
உள்ளதால் அவளொரு
நச்சுப்பூ என்றவன் அறியான்
விளக்கின் ஒளியில் மயங்கி
அதில் மடியும் விட்டிபோல்
அவள் பிடியில் இவன்
அவள் தந்த காமத்தில்
தன்னை இழந்தான்
மயக்கத்திலிருந்து எழுந்தான்
அவள் காணாமல் போய்விட்டாள்
அவன் காற்றில் சிதிலமான
காற்றாடிபோல் தெருவில்
உரு மாறி உறவின்றி பித்தாய்
அலைகின்றான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (21-Oct-18, 4:29 am)
Tanglish : avan
பார்வை : 79

மேலே