சுவர்க் கோழி
சுவர் கடியாரம்
காலம் அறிந்து
சுழல்கிறது
காலம் அறிய
சுழல்கிறது
சுவர்க் கோழி
காலம் தெரியாமல்
கூவுகிறது
நித்திரையைக்
கலைத்து
கனவை
கலைத்து
யாருடைய
விடியலுக்காக
கூவுகிறதோ
-----கவின் சாரலன்