காத்திருப்புகள்…
இவர்கள்
காத்திருக்கிறார்கள்..
குடும்பத் தலைவன்
காத்திருக்கிறான்
குறைந்துவிட்ட போதையை
ஏற்ற..
கூலி வேலைக்குச் சென்ற
குடும்பத் தலைவி
காத்திருக்கிறாள் கூலிக்கு..
பிள்ளைகள் காத்திருக்கிறார்கள்
போன இருவரையும் தேடி..
வறுமை காத்திருக்கிறது
இவர்களை
விழுங்கிட மொத்தமாய்..
அரசியல்வாதி காத்திருக்கிறான்
அடியோடு இவர்களை ஏய்க்க..
எல்லோரும் காத்திருக்கிறார்கள்
நல்ல வாழ்வுக்கு-
நடக்குமா...!