கருவறையை கல்லறையா

அவள் கருவறையே
உந்தன் கல்லறையானதால்........
உடலால் நொந்து............
உயிரை வெறுத்து............
உருக்குலைந்து போன..........
என்னுயிர் நட்பின் கண்ணீரில்
கணக்குதடி என் இதயம்!

பிஞ்சு மழலை - உந்தன்
நெஞ்சு குழியில்...........
நின்றுபோன மூச்சில்!
என் கண்கள் மூழ்கி போனது
கண்ணீரில்.......!

நான் முகம் பார்க்க
என் கண்மணியே!
முல்லை மலரென உன் தாயின்
புன்னகை நான் காண..........
மீண்டும் பிறந்திடு........
என்னை உயிர்த்தெடு!


உயிர் தோழியின் வலியால் உயிர் வாடும்
சிரஞ்சிதாவின் கவிதா.........

எழுதியவர் : சோட்டா சந்து (23-Oct-18, 10:25 am)
சேர்த்தது : சோட்டு வேதா
பார்வை : 170

மேலே