அவளோ எட்டாத தூரத்தில்

பனி படர்ந்த மாலை நேரம் .. அவள்
நினைவலைகள் என் மனதில் ஓரம்..

மார்கழி மாதத்தில் அவளிடும் கோலம்
கண்டு மயங்கினேன் ஒரு சில காலம்
அவள் கோலமிட நான் கோலமாவாக
கோலமும் காதலினால் கோபுரமானது

அழகு என்று எதேச்சயாய் நான் சொல்ல
அவள் கால் விரல்கள் அதனால் கோலமிட
அன்று உணர்ந்தேன் என்னவளின் காதலை
இன்று வரை அந்த நினைவுகள் நெஞ்சிலே

இப்போது அவளோ எட்டாத தூரத்தில்
நினைவுகள் மட்டும் மெட்டாக என் நெஞ்சில்.

எழுதியவர் : ஜெய் ரெட்டி (23-Oct-18, 9:58 am)
சேர்த்தது : ஜெய் ரெட்டி
பார்வை : 274

மேலே