எசப்பாட்டு

#எசப்பாட்டு பாடுவோம் இங்கே - # 11 # 03.07.16 அமுதசுரபி குழுமத்திற்காக எழுதியது)
¶¶¶ ¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶
அவன்
என் இதயத்தை உன்
கையில் தந்தேனடி
இனி என் வாழ்வும் என் தாழ்வும்
உன் கையில் தானடி..!

அவள்
என்னையே உன் கையில் தந்துவிட்டேன்
இனி எனக்கெல்லாம் நீ தானடா
எந்தன் கண்ணா
உன்னடிமை நானுந்தான் ஆனேனடா.!

அவன்

தேன்வழியும் வாய்மொழிதான்
என்றும் திகட்டாதடி
உன் மைவிழியின் வலையில்
வந்து விழுந்தேனடி..!

அவள்

என் கனவையும் நனவையும்
உனதாக்கிக் கொண்டாய்
என் கற்பனை யாவிலும்
வந்து குடியேறி நின்றாய் .!

அவன்:

இதய மாறுதலில்
இடம் மாறிக் கொண்டோம்
சிவனுமாய் உமையுமாய்
சரிபாதி ஆனோம்..!

அவள்:

சாதியும்... மதமும்
என்ன தடை போடக் கூடும்..?
சாதிக்க பிறந்தோம் நாம்
விதி வென்று வாழ்வோம்..!

அவன்:

நமை பிரிக்கும் நமன் களின்
உறவறுத்து வாழ்வோம்
நரகமே தொடருமெனில்
மரணத்தின் கை கோர்த்து போவோம்..!

-சொ.சாந்தி-
சென்னை-21

எழுதியவர் : சொ.சாந்தி (23-Oct-18, 9:46 am)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 170

மேலே