கடன்கார பேட்டை
பெரியவர் : தம்பி ...உங்கப்பா ஊர்ல இல்லயா !
பையன் : வெளியூர் போயிருக்காரு..
பெரியவர் : எந்த ஊருக்கு .....
பையன் : உங்க ஊர் ...கடன்கார பேட்டைக்கு தான் ...
பெரியவர் : யார பாக்க...
பையன் : உங்கல தா பாத்து கடன திருப்பி வசூலிக்க போயிருக்காரு !
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மனைவி : என்னங்க ....இன்னிக்கி நம்ம கல்யாண நாளுங்க....
கணவர் : மறந்தெ போச்சு ...வரதட்சன பாக்கி இன்னு வந்த பாடில்ல ...எங்க அந்த ச்கூட்டர் !
மனைவி :.......... ?????????
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சுற்றுப் பயணி : ..ஆட்டோ டிரைவர் .....கொஞ்ச வேகமா போயா..... யேர் போட்டுக்கு...
ஆட்டோ டிரைவர் : ஐயா ....நா......இந்த ஊருக்கு புதுசு ...தொழிலுக்கும் புதுசு...கொஞ்ச முன்னுக்கு
பின்னுக்கு இருக்கும்.....
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அதிகாரி : என்ன டிரைவர் ...ரொம்ப சந்தோசமா இருக்க..... இன்னிக்கி....
டிரைவர் : ஆமா சார்...காரு புதுசு ....எஜமானியும் புதுசு ........
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
குறுக்கு விசாரனை வக்கீல் : எந்த பத்திரத்தில் கை எழுத்து வாங்கிட்டு கடன் கொடுத்தீங்க !
கடன் கொடுத்தவர் : கடன் வாங்கனவர் கொடுத்த கடுதாசியில் தான்........!
-----------------------------------------------------------------------------------------------------------------------------
வீட்டுக்கு வந்த மாமியார் : மருமகளே .... என் பையன் வேளைக்கி போயிட்டு ..எத்தனை மணிக்கு
வீட்டுக்கு வந்திடுவான்....
மருமகள் : அவரா ....வேளைக்கு போனா தான.......!
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
காய்கரி வியாபாரி : என்ன வர வர காய்கரிகள ரொம்ப கொரவா வாங்கீகிட்டு போறீங்க.....
வீட்டுகாரம்மா : இப்போ ...அசையாதவிட அசைவதுக்கு வெல கம்மி யாய்டுச்சு ..அதான்...
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நீதிபதி : உன்ன மொடாமுழுங்கி என்று சொன்னதற்கு ...நீ என்ன செஞ்ஜ சொல்லு !
குற்றவாளி : அந்த ஆளோட மோதரத்த வாயில போட்டு முழுங்கிட்டன்.....
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆசிரியர் : மாணவர்களே ! ...விடுமுறை யாருக்கு அதிக பயனலிக்கும் ....மாணவர்களுக்கா
அல்லது ஆசிரியர்களுக்கா......
மாணவர்கள் : ஆசிரியர்களுக்குதான்....சம்பளம் .....லீவு ....எல்லாதயு ..எங்க
பெயர சொல்லி காலத்த ஓட்டறீங்க.....