அந்த கடற்கரைக்கும் நன்றி

அவளை கடற்கரையில் முதன் முதலாய்
கண்ட போது அவள் ஒற்றை ஓவியமாய்
பளிங்கு முகமோ கண்ணீர் கறைகளாய்
பேச முடியாமல் நின்றேன் வெகு தூரமாய்

காலம் என் கால்களை அவளை நோக்கி
இரும்பை காந்தம் ஈர்ப்பது போல் ஈர்க்க
அறிமுகமானேன் அக் கணம் அவளுடன்
ஆறுதல் சொன்னேன் உண்மை மனதுடன்

வாரத்தின் இறுதி நாட்கள் உறுதியானது
எங்கள் சந்திப்பு இன்ப தொடர்கதையானது
இப்போது எங்கள் நிலையோ அவளின்றி
நானில்லை நானின்றி அவளில்லை என்றானது

எங்கள் காதலை சேர்த்து வைத்த கடவுளுக்கு
நன்றி.. அந்த கடற்கரைக்கும் நன்றி !!!

எழுதியவர் : ஜெய் ரெட்டி (24-Oct-18, 10:11 am)
சேர்த்தது : ஜெய் ரெட்டி
பார்வை : 92

மேலே