என்னை தாக்கிய தாமரை பூவே
என்னை தாக்கிய தாமரை பூவே
உன்னை தந்திடுவாய் ஆனந்தமாய் வாழ்ந்திடவே
உன்னிடம் நித்தம் சுவாசம் கொள்ளவே
என்னிடம் இதயம் வாடாமல் இருக்கிறதே
அன்பு வாசம் வீசியே வந்திடுவாய்
ஆசையும் நிறைவேற்றியே பற்றோடும் வாழ்ந்துடுவோம்
எனக்கான சிந்தனையும் உன்னில் தொங்கிபோனதால்
உனக்காக ஏங்குவது எனக்கு மகிழ்ச்சியே
என் பலமே நீ ஆனதால்
உயிரற்ற உடலாக நலிந்து போகிறேன்
உயிராக நலன் பெறவே வந்திடுவாய்
என்னை தாக்கிய தாமரை பூவே
இனிய உணர்வை தரும் சங்கீதமே
சற்றே திணறித்தான் என்மனம்
போனாலும்
ஒளியாய் மனமும் வெளித்து அலைபாய்கிறதே
உன் பார்வையை காட்டிவிடு ஒருமுறை
நான் யார் என்று அறிந்துகொள்வேனே
என்னை தாக்கிய தாமரை பூவே