தனிமை கொடுமை
இரவு நேரம் நீண்டு செல்ல
கால் நரம்பு ரெண்டும் பிண்ணிக் கொள்ள
கடும் வலியை உணர்த்தியது எந்தன் விரல்கள்
மறதி என்ற சொல் மடிந்து போக
உன் நினைவுகள் வந்து என்னைக் கொல்ல
கடும் குளிரை உணர்ந்த எந்தன் தலையோ
கடந்த கால் வாழ்வை அசைபோட்டது
நரம்பை உடைக்க
திரவ இரத்தம் உறைந்தது
உறங்கவிடாமல்
ஊசியாய் குத்தியது உன் எண்ணம்
தூசு விழுந்த விழிகள் தூங்க மறுத்தது
பாரம் கொண்ட மனதிற்கு
தூக்கம் என்பது வெகுதூரமே
கொடுமையிலும் கொடுமை
இளமையில் தனிமை ஆகுமே!
எப்போது என் துன்பம் தீருமோ?
விரைவில்
உன் நினைவில்
என் ஆவி வெளியேருமே!