உயிரினும் உயர்வு கொண்டாய்

தாய் தந்த தமிழே - என்
தாயைத் தந்த தமிழே
தித்திக்கும்தே னமுதே
தெவிட்டாததீந் தமிழே நின்னை
கையாள கனிசுவை தருகிறாய்
சொல்லாட சுகந்தந் தெளிக்கிறாய்
உயிரினு உயர்கொள் பைந்தமிழே
தாய்மைபோல் புனிதம் கொண்டாய்
உயிரல்ல நீயெனக்கு உணர்வானாய்
உயிரொருநா ளெனைப்பிரியும்-தமிழே
நின்னைநான் பிரிதல் கூடுமோ?
எந்தைவழி யெனைச் சேர்ந்தாய்
தமிழுணர்வே - என் வழி
தலைமுறைக்கும் தளைக்காயோ?
எனையாளும் தமிழே - இனி
உலகாளும் தமிழே!!!!