தீபாவளி

திரும்பிய திசை எல்லாம்
தீபஒளி வெள்ளம்
திக்கற்றவர்க்கு கூட
திகட்டாத இன்பம் தரும்
திருநாளிந்த தீப ஒளித் திருநாள்

இலேசாய் திரும்பிப் பார்கின்றேன்
இன்று வரை
கடந்து வந்த பாதையை
இலக்கில்லாத இவ்வாழ்க்கை
இலையுதிர் காலம் போல

சுகங்களும் சுமைகளும்
நிறைத்த வாழ்க்கை அன்று.....

இன்று
இலக்கை முடிவு செய்தேன்
நம்பிக்கையெனும் துணை கொண்டு
இலையுதிர் காலத்தில்
பூத்து குலுங்கியது போல
இல்லத்தில் கொண்டாடும்
இனிய தீப ஒளித் திருநாளாம்
இந்த தீபாவளித் திருநாள்

சுமைகள் அதிகம் இருந்தாலும்
சுமைகளும் சுகமென
சுற்றத்தின் துணை கொண்டு
சூரியனைத் தொட்டு விடத் துடிக்கும்
இந்நாள் எங்கள் வாழ்விலே
ஓர் பொன்னாள்

எழுதியவர் : கருப்பசாமி (26-Oct-18, 11:00 pm)
சேர்த்தது : ஆர் கருப்பசாமி
Tanglish : theebavali
பார்வை : 82

மேலே