ஏங்குது மனது
பச்சை நிறப்புல்
பதுங்கி பாயும் நதி
இச்சை பாடும் குயில்
இதமாய் வீசும் தென்றல் ....
அசைந்தாடும் மரங்கள்
அழகாய் உதிரும் பூக்கள்
திசை எட்டு தேடியும்
காணாத மனித உருவங்கள் ...!!
சூரியன் விழ
சந்திரன் எழ
இரண்டும் முத்தமிடும்
சந்தியா பொழுதில் ....
மரக்கிளையில் கூவிடும் குயில் ,
அடர்ந்து பரந்த
அமைதியான வனத்தில் ஓடிடும்
நதியோரம், ஓர் குடில் ....!!
தென்றல் வந்து தீண்டி மெய்
சிலிர்த்திடும் பெண்மையாய் நீ ..!!
உன்னை கண்டு உருகிடும்
உண்மையாய் நான் ..!!
மெல்ல உன்னை நெருங்கிட
ஆசையாய் நீ என் உச்சி முகர்ந்திட ,
இயற்க்கை மட்டுமே நம்மைக் காண
வெக்கத்தில் நாணி நீ
என் மடிசாய....!!
தெய்வம்போல் உன் அன்பு கண்டு
என் கணங்கள் கலங்க
உன் இதழ்கள்
என் கண்ணீர் பருக....
உள்ளம் உருகி ,
நெஞ்சம் நெகிழ்ந்து
இதயம் இடம் மாற
பிறவி பயன்
அடைந்த இன்பமாய்
உன்னை என்
உயிரோடு உயராய்
கட்டித்தழுவ....
மரண சுகம் மனதில் பிறந்து
மறுகணம் கண்விழித்து
நான் நோக்கினால்
நீ இல்லை என் அருகில்
பித்தன் -நான்
உணர்ந்தேன் அப்பொழுதில்
கண்டது சொப்பனம் என்று..!!!
அத்தனை ஏக்கமும்
கனவாய் கலைய
கண்ணீர் மட்டும்
நின்றது துணையாய்
நிஜத்தில் ....!!
மீண்டும் அக்கனவு
பிறந்திட
ஏங்குது மனம்
இமைகள் மூடிட
நிரந்திரமாய்...
என்றும்...என்றென்றும்