பட்டிக்காடு
பட்டிக்காடு : மரம் உண்டு, காடும் உண்டு
பூந்தோட்டங்களுண்டு, தோப்பு
துறவுகளுண்டு,ஓடும் நதியுண்டு
குளம், குட்டைகளுண்டு
பசுமை வயலுண்டு ,வீசும் தென்றல்
காற்றுண்டு...கேணி நீருண்டு
நெற்றிவேற் சொட்ட பணிபுரியும்
ஏழை எளியவர்களுண்டு
மனம்திறந்து சிரித்து பேசும்
நல்லோர்கள் உண்டு......
பசித்து வந்தோரை
இன்முகத்துடன் உபசரித்து
உணவளிப்போர் உண்டு
பழைய சோர் அமுதும்
வரகு சோறும், கத்தரிக்காய்
வெத்தல குழம்பு சின்ன வெங்காயமுண்டு
உண்டு சிரமம் தீர்க்க
வாசலில் திண்ணை உண்டு
கோவில்கள் பலவுண்டு
திருவிழாக்கள், வார சந்தை
ஆடு, கோழி சண்டையுமுண்டு
'டென்ட்' சினிமாவும் உண்டு
இயற்கை எழில்மாற இடங்கள்
பலவுண்டு,ஊரிடைய பாயும்
நதியில் மிதந்துவர 'பரிசல்'
சவாரியுண்டு, பள்ளுண்டு
அதை அழகாய் பாடுவோருமுண்டு
இயற்கை எழில் பொங்கும்
நாட்டுப்புறங்கள் ....இன்று
அழிவின் எல்லையில் ....
காப்போமா இல்லை
அளித்து நாமும் அழிவோமா
மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு.