கவிதை - அன்னையின் கருணை

அன்னையின் கருணை

அன்னையே.., நீ
என்னையே நினைத்து
உன்னையே வாட்டிக்கொள்கிறாய்,
கடன்தொல்லையே தீராததால்
தந்தையே சொன்னதால், சொந்த
மண்ணையே விட்டுச்சென்றேன் அம்மா!

பாஷையே தெரியாதநாட்டில் வந்திறங்கி,
பாலைவனத்துமண்ணையே பார்த்துக்கொண்டு, உன்
பாசத்தையே இழந்து பணம்சம்பாதித்து
பொன்னையே வாங்கிவந்துதந்தாலும், என்
அன்பையே எதிர்பார்க்கும், உன்
கருணையே, கருணை அம்மா!


என்றும் உன் அன்புள்ள
வி. விவேக்

எழுதியவர் : விவேக். வி (28-Oct-18, 4:30 pm)
சேர்த்தது : Vivek V
பார்வை : 2922

மேலே