மார்பகம் ஒரு தாயகம்

மார்பகமே!!

இதுவரை கற்சிற்பமாய்
இருந்த உன்னில்
தாய்மை அடைந்த பின்னே
பாலீரம் கசியவிடுகிறாய்..

நேரம் தவறும்போதெல்லாம் சேய்யவளின் பசியை
தாய் அறியும்முன்
நீ அறிந்து பால்கட்டி
வைத்துக்கொள்கிறாய்..

உன் ஒருபுறமோ
சேய்யவள் சுவைக்க
மறுபுறம்
நீ பால் வடித்து
ஏக்கத்தில் தவிக்கிறாய்..

முன்னுரிமை வழங்கிய
புறம் பெருத்தும்
மறுபுறம் இழைத்தும்
நீ வருத்தம் தெரிவிக்கிறாய்..

சில மாதம் மட்டுமே
உழைத்து
சேய்யவளை ஆயுள் வரை
காத்து நிற்கிறாய்..

உன்னிடம் உண்டு,
சிரித்து, மகிழ்ந்து, விளையாடி, உறங்குவதால் சேய்யவள்
தாய் முகம்
காணும் முன்பே
உன்னைக் காண செய்கிறாய்..

அடி உதை கடி என
சேய்யவள் தரும்
இன்னல்களை
சுகமாய் பொறுத்து
உள்ளுக்குள் கலங்குகிறாய்..

தாய்ப்போலவே
சேய்யவளுக்காக
முதலில் துடிக்கும்
நீ பெண்ணுடலின்
'தாய்'அகம் (தாயகம்) என்றே போற்றப்பட வேண்டும்!!

-கௌதம பிரியா

எழுதியவர் : ரியாதமி (29-Oct-18, 1:30 am)
பார்வை : 829

சிறந்த கவிதைகள்

மேலே