என் வழி

ஒருவர் செல்வது நேர்வழிப் பாதை,
ஒருவர் செல்வது சுற்றிச் சுற்றி மீண்டும் வரும் வட்டவழிப் பாதை:
வீடு திரும்புவதற்கோ அல்லது,
‘காலங்களைக் கடந்து
கனவாகிப் போன’
கன்னியின் வருகைக்கோ
காத்திருக்கிறார்...

ஆனால்...
நான் செல்கிறேன்,
நில்லாமல், என் சோகங்களைச்
சொல்லாமல், என்பாதையோ
நேரானதுமில்லை; எல்லை கடந்து
பரந்து விரிந்ததுமில்லை;
எப்போதும்... எங்குமில்லாமல்...
தடம்புரண்ட புகையிரதம் போல,
எங்கேயோ....!

மூலக்கவிதை : அன்னா அக்மதோவா
தமிழில் மொழியாக்கம்: தமிழ்க்கிழவி

எழுதியவர் : தமிழில் மொழியாக்கம் : தமிழ (30-Oct-18, 1:03 am)
சேர்த்தது : தமிழ்க்கிழவி
பார்வை : 379

மேலே