ஓர் சுகம்

நீ பேசா மணித்துளி 
உன் அழைப்புக்காக mobile-ஐ 
      வெறிக்கையில் - ஓர் சுகம் 

நீ வரும் வேலையில்
உன் வழியில்  விழிகள்
      காத்திருப்பது- ஓர் சுகம் 

நீ பிரிந்த நேரத்தில்  
உன் whatsapp message-ஐ 
       படிக்கையில் - ஓர் சுகம் 

நீ இல்லா  நாட்களில்  
உன்னுடன் சென்ற இடத்தில் 
       நிற்க்கையில் -ஓர் சுகம் 

நீ பேசா  நொடியில்   
உன் வார்த்தைகள் எல்லாம் 
       நினைவில் -ஓர் சுகம் 

நீ பிரியும் நாழி 
உன் கண் இமைக்காமல் 
      பார்க்கையில் - ஓர் சுகம் 

நீ விட்டுப் போகையில்  
உன் வாசனை என்
       கைகளில் -ஓர் சுகம் 

நீ என்னை பார்க்கையில் 
உன் விழியின் புன்னகைக்கு
     என் கண்ணீர் -ஓர் சுகம்

எழுதியவர் : Safeena begam (30-Oct-18, 1:44 am)
பார்வை : 432

மேலே