வீசி எறியப்பட்ட விநாயகர் சிலைகள்

எங்கிருந்தோ வந்தார்கள்
கலைஞர்கள்-இரவு பகலாய்
கண்ணுறங்காது ஆர்வத்துடன்
படைத்த வண்ண வண்ண
விநாயகர் சிலைகள் -இவற்றிற்கு
நான்கு நாட்கள் அமோகமாக
பூசைகள் செய்து, வித விதமாய்
நெய்வேதியங்கள் , கொழுக்கட்டை
லட்டு, கடலைச்சுண்டல் என செய்து
படைத்து எல்லோருக்கும் அளித்து
இரவில் வித விதமாய் கச்சேரிகள்
என வெகுவிக் கொண்டாடி
மேல தாள கோஷமுடன்
வீதி புறப்பாடு பின்னர் அழகு
விநாயகர் சிலைகளை இவர்கள்
கடலிலும்,குளத்திலும், நதியிலும்
வீசி எரிவதேன் ; பாவம் கணபதி
சில இடங்களில் 'கிரேன்' கொண்டு
தூக்கப்பட்டு கடலில் வீசப்படுவதையும்
கண்டேன்; மனம் நொந்தேன்
இவர்கள் கணபதியை இந்நான்கு நாட்கள்
பூஜித்தது எதற்கு ......................
பூஜித்த நாயகனை வீசி எறிவது எதற்கு
வீசியது இவர்கள் பக்தியையா .....
ஆணவத்தை வீசியெறிய இன்னும்
இவர்கள் கற்றுக்கொள்ளவில்லையே ......ஏன்
இன்னும் புரியலையே எனக்கு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (30-Oct-18, 9:13 am)
பார்வை : 33

மேலே