கனவிலும் நனவிலும்
விழி தாழ் போட்டுக் கொள்ளும் போது
மனத்தாழ் திறந்து ஏன் வருகிறாய் என் கனவில்
விழி தாழ் திறந்தாலும்
மனத்தாழ் இறுக்கமாய்
போட்டுக் கொண்டு
வெளியே செல்ல மறுக்கிறாய்
என் நினைவில் இருந்து
இருளான இரவினில்
இனிதானவை கனவுகள் தான்
அவை விடியலில் விழியை விட்டு நீங்கினாலும்
மனதில் நினைவுகளாய்
மீண்டும் மீண்டும்
வருவதேனோ!