காதல்
என்னென்னவோ படித்து ஆராய்ந்து
பட்டங்கள் பல பெற்றிடலாம்-
இன்றவள் , நான் தினம் தினம்
பார்த்து அவள் காதலுக்கு ஏங்கியவள்
தன பார்வையால் மௌனமொழி ஒன்று பேசி
எனக்கு முதல் அதிர்ச்சி தந்தாள்'
அதிர்ச்சியின் தாக்கத்தில் நான் இருந்தபோதே
என்னருகில் வந்தாள் அன்னக்கொடியாய்
'உன்னை நான் நேசிக்கிறேன், உன் மீதெனக்கு காதல்
என்றாள் அவள் .......... அதைக்கேட்டு என்
உடலெல்லாம் புல்லரிக்க , என் உள்மனது சொன்னது,
" இவள் சொன்ன இந்த வார்த்தைகள் வெறும் வார்த்தைகளல்ல
'காதலனாய்' உனக்கு அவள் அளித்த பெரும் பட்டமிது
வாழ்க்கை பல்கலை கழகத்தின் மிகப்பெரிய
பட்டமிது, படித்து வாங்கா 'கௌரவப் பட்டம்'
ஆனால் உன்னை வாழவைக்கும் பட்டம். "
ஒரு பெண் வாய்விட்டு காதலிக்கிறேன் என்று கூறினால்
அவள் எண்ணத்தில் நீ உயர்ந்துவிட்டாய் என்று பொருள்