சிலநேரங்களில் மனம்

சிலநேரங்களில் மனம்

இரவின் அமைதியை
குரைத்து குலைக்கும்
நாயாய்

ஓவியவரைவில்
வளைய மறுக்கும்
கோடாய்

மகரந்தம் முடிந்தும்
மறுபடி வந்து சத்தமிடும்
வண்டாய்

எழுதியவர் : இளவல் (31-Oct-18, 5:05 pm)
சேர்த்தது : இளவல்
பார்வை : 794

மேலே