விநாயகர் துதி
ஆனை முகத்தாலே !
அகிலம் படைத்து ஆள்கிறாய் !
கவலை எனக்கில்லை !
கணேசன் நீ துணை நிற்கின்றாய் !
நீயே எந்தன் துணை !
நாளும் எந்தன் வினை !
வெற்றி காணுமே !
வெற்றி காணுமே !
உலகம் என்னும் உருண்டையை
உன் ஒரு விரலால் நீ சுற்றுகிறாய் !
கவலையின்றி வாழ்வதற்கு
கணேசா வழி தீட்டுகிறாய் !
நாளும் உன்னை வணங்கியே
நாட்களை நான் துவங்குவேன் !
கஷ்டம் யாவும் தீரவே
உந்தன் பெயரை முனுங்குவேன் !
விநாயகர் போற்றி !
கணேசனே போற்றி !
என்று நாளும் போற்றினால்
வெற்றி வருமே நம்மை தேடி ...