நெஞ்சில் நுழைந்த காதல்
அதுவரை கண்டதில்லை அவ்வளவு அழகை
என் கண்கள்
கண்டவுடன் காதலில் எனக்கு உடன்பாடு இல்லை
நான் அவளை காணும் வரை
காதல் என்றே தெரியாமல் அதில் விழுந்தேன்
எழும்ப முடிந்தும் எழும்பாமல் இருந்தேன்
காலம் பல அவளோடு கடந்தேன்
என்னை அவள் வேண்டாம் என்ற நிலையிலும் தொடர்ந்தேன்
அவள் மனம் மாறவில்லை என்று உணர்ந்தேன்
காலம் கடந்தது கல்யாணம் நடந்தது
இன்று காலையில் கண் விழித்தால்
இன்றும் அதே அழகிய முகமும்
நானும்....