இவள் தேவதை

காகங்கள் கரைகின்றன
-----காற்றோடு கலந்து வரும்
காலை நேர பூபாளம் இதுதான் !

கதிர்கள் விரிகின்றன
------கீழ் வானம் சிவக்கிறது
காலை நேர ஓவியம் இதுதான் !

மலர்கள் மலர்கின்றன
-------சிரிக்கிறது மலர்த்தோட்டம்
காலை நேர காணொளிக் காட்சி இதுதான் !

வார்த்தைகள் விரிகின்றன
-------வரிகள் தொடர்கின்றன
காலை நேரக் கவிதை இதுதான் !

நீராடிய கூந்தல் காற்றில் கவிபாட
-------பூப் பறிக்க வருகிறாள் தோழி
காலை நேர தேவதை இவள்தான் !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (2-Nov-18, 7:11 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : ival thevathai
பார்வை : 145

மேலே